இந்தோனேசியாவில் வெள்ளம் 900 பேர் பலி, 1000 பேரை காணவில்லை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொல்லயிரமாக (900) அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தோனேசியாவின் மலாக்கா ஜலசந்தியில் கடந்த வாரம் உருவான சூறாவளியால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

கட்டுங்கடங்காத இந்த வௌ்ளத்தின் தாக்கத்தால், தென்கிழக்காசிய நாடுகளின் சில பகுதிகளில் பாரிய மழை மற்றும் மண்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன.கடந்த சில தினங்களாக ஆசிய நாடுகளை தாக்கியிருந்த மோசமான காலநிலையின் எதிரொலியே, இந்தோனேசியாவையும் தாக்கியிருந்தது.இதனால்,இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிப்புற்றன.

இந்நாடுகளில் ஒட்டுமொத்தமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி,வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்களில் சிலர்,மூன்று அல்லது நான்கு தினங்களாக உணவு மற்றும் நீரின்றி வாழ்நாளை கழித்தனர்.இந்தோனேசியாவின் சில கிராமங்கள் முழுமையாக அழவடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் தொடர்பாடல் செயலிழந்தமை என்பவற்றால் மீட்பு பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply