கல்வி, விளையாட்டு சிறந்து விளங்கினால் போதைப்பொருளுக்கு இடமிருக்காது

கல்வியும், விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங்களுக்கு இடமிருக்காது. எனவே, கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் நடைபெற்றது.

அங்கு அமைச்சர் மேலும் கருத்து வௌியிடுகையில்,

கல்விக்காக எமது சமூகம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது. முதலாம் ஆண்டு முதல் உயர்தரம் வரை தமது பிள்ளைகளுக்காக தாய்மாரும் மீண்டும் கல்வி கற்கின்றனர்.

தமது பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக கஷ்ப்படுகின்றனர்.

கல்வியில் யாழ்ப்பாணத்துக்கென தனித்துவம் உள்ளது.

அறிவு பசிக்கு கல்வியே சிறந்த தீர்வு. அதேபோல விளையாட்டு துறை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு மிக முக்கியம். கல்வி, விளையாட்டுமூலம் ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்கும்போது போதைப்பொருள் தானாகவே அழிந்துவிடும்.

கல்வியில் பின்தங்கி இருப்பவர்களே கலாசார ரீதியிலும் பின்னடைந்து தவறான வழியில் செல்லும் நிலை காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply