இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் : மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசு உட்பட ஐந்து துறைகள் இணைந்து இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் கூட்டு பேச்சுவார்த்தை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எஸ். பி சிங் தெரிவித்தார்.
மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி சிங் ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் சென்றிருந்தார்.
ராமேஸ்வரம் சென்றவர் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடியில் சென்று பார்வையிட்டார். பின்னர் பாம்பன் தெற்குவாடி பகுதியில் இலங்கை கடற்படையினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி எல்லை தாண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாம்பன் விசைப்படகு மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மீனவர்களிடம் மத்திய அரசின் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு செய்யப்பட்டுவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய இணையமைச்சர் எஸ்.பி சிங் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்று சிறைபிடிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 10 மீனவர்களின் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மீன்வளத்துறை, வெளி விவகாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய கடற்படை, மாநில அரசு என ஐந்து துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.
அதேபோல் இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்திட மீன்வளத்துறை சார்பில் இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி விரைவில் நடத்தப்படும் என்றார்.
மீனவர்களுக்கு அபராத தொகையை அரசு செலுத்தி உதவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர்.
அபராத தொகையை ஏன் அரசு செலுத்த வேண்டும் இது இந்திய அரசின் தவறல்ல அபராத தொகையை அரசு செலுத்தும் பட்சத்தில் மீனவர் எல்லை தாண்டும் பிரச்சினை அதிகரிக்கும் எனவே இப்பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், டிட்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கை அரசிடம் பேசப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply