பிரித்தானிய பிரதி பிரதமரை சந்தித்த தமிழ்க் கட்சி பிரதிநிதிகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் பிரதி பிரதமர் டேவிட் லம்மி (David Lammy), இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் அதற்கான நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மற்றும் தமிழ்ச் சமூகத்தினர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக பிரித்தானிய தூதுக் குழுவினரிடம் தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினர். இதற்கு பதிலளித்த துணைப் பிரதமர் டேவிட் லம்மி, நியாயமான முன்னேற்றங்களுக்கு ஆதரவளிக்கவும் நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் குரல் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து ஒலிப்பதை உறுதி செய்யவும் இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்தார். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்றஉறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply