ஐ.நா நிபுணர் குழுவிற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டு ஐ.நா செயலாளர் பாங் கீ மூனால் அறிவிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவிற்கு இலங்கை அரசாங்கம் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக, வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபரான டாருஸ்மான் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டவர் எனவும் இலங்கையில் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியிலும் டாருஸ்மான், இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நிபுணர்கள் குழு நியமனம் அவசியமற்றது எனவும், இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply