கிளிநொச்சியில் கடும் மோதல் புலிகளுக்கு கடும் சேதம்

கிளிநொச்சி களமுனையிலுள்ள படையினர் பரந்தன் மேற்கு, அடம்பன் மற்றும் இரணமடு பகுதிகளில் எல்ரிரிஈ நிலைகள் மீது நேற்று (டிச.16) காலை முதல் நடத்திய தாக்குதலில் 120 எல்ரிரிஈயினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250க்கும் அதிகமான எல்ரிரிஈயினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது செயலணி படையினரும் 57வது படைப்பிரிவினரும் பரந்தன் மேற்கு, கிளிநொச்சி பகுதிகளில் எல்ரிரிஈயினால் அமைக்கப்பட்டிருந்த மண் அணைக்கட்டின் 5 கி.மீ.பகுதியை கைபற்றி அதன் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

நேற்று காலை பீரங்கி, மோட்டார் உதவியுடன் கிளிநொச்சி,வடபகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் தளங்கள் மீது படையினர் கடும்தாக்குதல் தொடுத்துள்ளனர். இத்தாக்குதலில் பயங்கரவாதிகளின் பீரங்கி, மோட்டார் தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டதால் எல்ரிரிஈயினரின் நிர்வாகம் முற்றாக குலைக்கப்பட்டுள்தாக பாதுகாப்பு அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
இம்மோதலில் இராணுவத்தினர் 25 பேர் உயிர்தியாகம் செய்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply