ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்
ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 23 முன்னாள் பெண் விடுதலைப் புலி போராளிகளை அவர்களது குடும்பங்களுடன் இணைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 304 பெண் போராளிகள் உள்ளிட்ட 4460 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 11868 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் தரம் எட்டு வரையிலுமே கல்வி பயின்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply