ஒபாமா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி மிச்சேலி மற்றும் 2 ஜெட் விமானங்கள் நிறைய அதிகாரிகள், ஊழியர்கள் வருகிறார்கள். மும்பை தாஜ்மகால் அரண்மனை ஓட்டலில் நவம்பர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் 2 நாட்கள் ஒபாமா தங்கி இருப்பார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தாஜ் ஓட்டலில் ஒபாமா தங்கி இருக்கும் 2 நாட்களும் வேறு யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு கருதி தாஜ்மகால் அரண்மனை ஓட்டலில் உள்ள 604 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒபாமா வருகையையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply