சரத் பொன்சேகாவின் நிலை வேதனையளிக்கிறது : கரு ஜயசூரிய

வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் நிலை தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக ஐ.தே.கவின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை நேற்று மாலை பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் தாம் திருப்தியடையமுடியாது.

“வைத்திய ஆலோசனைப்படி அவருக்கு வழங்கப்பட வேண்டிய உடற்பயிற்சி உபகரணமும் இதுவரை வழங்கப்படவில்லை.

“தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றம் செல்வதால் அவரது ஆரோக்கியம் மோசமடைந்துள்ளது” என்றார். கரு ஜயசூரியவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்தன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் சரத் பொன்சேகாவைப் பார்க்கச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply