அரபு நாடுகளில் ஐரோப்பிய அழுத்தம் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு

அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள ஐரோப்பிய அழுத்தம் தற்போது இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். ஜாஎல, பண்டிகொட பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் உரையாற்றுகையில் –

இன்று முழு அரபும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. சூடான் விழுந்தது. அடுத்து ஓமான் இன்று விழுந்துள்ளது. லிபியா விழும் தருணத்தில் உள்ளது. எண்ணெய் வளங்கள் உடைய இவ்வாறான நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் உள்ளது.
 
அந்த நாடுகளை வீழ்த்தி மீண்டும் ஜனநாயக ரீதியில் அந்த எண்ணெய் வளத்தை பெற முயற்சிக்கின்றனர். எமது நாட்டிற்கும் இந்த அனர்த்தம் உள்ளது. எமது நாட்டிற்கு இந்த அனர்த்தம் இல்லை என்று நினைக்க வேண்டாம். எமது நாட்டு கரையோரத்திலும் எண்ணெய் உள்ளது. மன்னார் வலைகுடாவில் எண்ணெய் உள்ளது. எதிர்காலத்தில் எமக்கு எண்ணெய் வளம் கிடைக்கலாம். எமது நாட்டைத் திருப்பிப் பார்க்கும் நிலைக்கு கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகள் இருந்தன. எனினும் எமக்கு அதிஷ்டம் உள்ளது. எமது மக்களை ஏமாற்ற முடியாது. என்றார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply