வாழ்கை யுத்தமாக மாறியுள்ளது : ரணில்
வாழ்கையை முன் எடுத்து செல்வது ஒரு யுத்தமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.கேகாலை ரம்புக்கன பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் வரியினை அதிகரித்து பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றனர். மறுபக்கம் மின்சார கட்டணத்தை அதிகரிக்கின்றனர்.
கிராமங்களில் வாய் பேச்சு மூலமே அபிவிருத்தி நடவடிக்கைகள் முன் எடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்கள் தெளிவுடன் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் லீக்ஸ் கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவாக காணப்பட்டது.
எனினும் தற்சமயம் லீக்ஸ் 250 கிராமின் விலை நாற்பது ரூபாவாக காணப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply