தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருந்திருந்தால் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றியிருப்பேன் : ஆனந்த சங்கரி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தான் எதிரானவன் அல்லவென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தோ்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் அரிப்பு பிரதேசத்தில் நடைபெற்ற பிரஸ்தாப கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நான்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருந்திருந்தால் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றியிருப்பேன். நான் ஒன்றும் அவருக்கு எதிரானவனோ, விடுதலைப் புலிகளுக்கு எதிரானவனோ அல்ல.
 
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் எமது பிள்ளைகள் தான். அவர்கள் அழிக்கப்படக் கூடாது என்றுதான் நான் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்துள்ளேன். அதன் காரணமாகவே எங்களுக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாரிய சேவையாற்றிய பல தொண்டு நிறுவனங்களை அரசாங்கம் இழுத்து மூடிவிட்டது. அவ்வாறான நிலையில் குமரன் பத்மநாதன் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளாராம். அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் மக்களை ஏமாற்ற அவர் போடும் தாளங்களில் ஏமாந்து விட நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்றும் ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply