“எனக்கென்றால் இன்னும் சுதந்திரம் இல்லை” : ஜனாதிபதி கவலை
30 வருடங்களின் பின்னர் யுத்தம் நிறைவடைந்து நாட்டு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்தாலும் தன்னால் இன்னும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவிக்கின்றார்.கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது:-
இன்று சரியான சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள். இன்று நீங்கள் அவ்வாறு அனுபவித்தாலும் எனக்கு இன்னும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை.
நான் இங்கிலாந்து சென்றதும் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிக்கின்றனர். ஒரு பகுதியை புலிகள் முழுமையாகப் பிடித்துக் கொண்டனர். அனைவரும் வந்திருந்தனர். இருந்த ஹோட்டலை சுற்றிவளைத்தனர். இவ்வாறுதான் உள்ளன.
எப்போதும் சுதந்திரமாக கதைக்க இடமிருந்த ஒக்ஸ்வேர்ட் பல்கலைக்கழக உரையாடலை பயந்து நிறுத்திகின்றனர். இன்று இந்த நாட்டிற்குள் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதில்லை. இவர்கள் வெளிநாட்டில்தான் தகவல் பெறுகின்றனர்.
மனித உரிமைகள் இல்லை என வெளிநாட்டில் வழக்குத் தாக்கல் செய்கின்றனர். இராணுவ நீதிமன்றிற்கு எம்மை அழைத்துச் செல்வதுதான் அவ்களின் நோக்கம். எதிர்கட்சிகளின் கடமை இன்று இதுவாகத்தான் உள்ளது. இதற்கு இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply