ஜப்பானில் இதுவரை 1000 பேர் மரணம்
ஜப்பானில் இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் மரணித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் நாளை இத்தொகை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அதேவேளை ஜப்பானின் அணுசக்தி சேகரிக்கப்பட்ட இடத்தில் பாரிய விகத்து ஏற்பட்டால் வரும் அபாயங்களில் இருந்து மக்களைக் காக்க சுமார் மூன்று கி.மீ தூரத்திற்கு அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அதற்குள் இருக்கும் அனைவரும் றேடியோ கதிர்ப்பு வீசும் என்பதால் வீடுகளுக்குள்ளேயே பூட்டியபடி இருக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளனர். நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள புக்குசீமாவில் இருந்த அணுசக்தி மையத்தின் வீரியம் இறக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாரிய தீப்பிடிப்புக்களால் நாட்டின் பல பகுதிகள் எரிந்தவண்ணமுள்ளன. உலகத்திலேயே சுனாமி ஏற்பட்டால் முன்னரே எச்சரிக்கை வழங்கும் நாடுகளில் ஜப்பான் முன்னணி வகிக்கிறது.
ஜப்பானின் தொலைக்காட்சிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், நில நடுக்கம், சுனாமி போன்றன வரும்போது அவை தானாகவே செயற்படும். மேலும் மக்களை பனிக் அடைய விடாமலிருப்பதற்காக பாடசாலையில் இருந்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஜப்பானிய கட்டிடங்களே பூகம்பத்தை குறிக்கோளாக வைத்தே கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி உயிர் தப்புவதென்ற கடும் பயிற்சிகள் ஜப்பானிய மக்களுக்கு உண்டு. அதனால் உயிர் சேதத்தின் அளவு குறைவாக உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply