அநுராதபுரத்தில் பிள்ளையார் சிலைக்குத் தீ

அநுராதபுரத்தின் குடியிருப்புகள் நிறைந்த பகுதியொன்றில் நீண்ட காலமாக வழிபடப்பட்ட பிள்ளையார் கோவிலொன்றுக்கு இனந்தெரியாத விஷமிகளால் தீ மூட்டப்பட்டுள்ளது. அநுராதபுரத்தின் நீராவி பிரதேசத்தின் தேவாநம்பியதிஸ்ஸை மாவத்தையில் மிக நீண்ட காலமாக பிள்ளையார் கோவிலொன்று அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்திருந்தது. 1983ம் ஆண்டுக்கு முன்பதாக அமைக்கப்பட்டிருந்த பிரஸ்தாப கோயில் இதுவரை ஓரளவுக்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்திருந்தது.

அங்கிருந்த பிள்ளையாரை பிரதேசவாசிகளான சிங்களவர்களும் வழிபட்டு வந்ததே அதற்கான காரணமாகும். அவ்வாறான நிலையில் கடந்த 14ம் திகதி கோயிலினுள் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கு யாரோ விசமிகள் தீவைத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. சிலையின் கழுத்துப் பகுதியில் பழைய டயர் மற்றும் டியூப் என்பன போடப்பட்டு தீ மூட்டப்பட்டிருந்த போதும், சிலைக்கு பாரிய சேதங்கள் இல்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply