மெதமுலனவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வாக்களித்தார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் மகன்மார்கள் மெதமுலனை டி.ஏ.ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இன்று காலை வாக்களித்தனர். நாடளாவிய ரீதியிலுள்ள 335 உள்ளூராட்சி மன்றங்களில் 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் இன்று வியாழக்கிழமை 7396 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் இவ்வாக்களிப்பில் 94 இலட்சத்து 38 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் கட்சிகளின் சார்பில் 22,661 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 6,471பேரும் போட்டியிடுகின்றனர். 235 சபைகளுக்கும் 3036 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 29 ஆயிரத்து 132 பேர் களத்தில் குதித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply