இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நவனீதம் பிள்இளுக்கு அழைப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது. விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
நவனீதம் பிள்ளையை உத்தியோகபூர்வமாக அழைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கிளைக்கான இலங்கைப் பிரதிநிதி ஷானுக்கா செனவிரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் அவசிமானது என அர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையி;ன் மூலம் தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்பட முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply