கடாபியை கட்டுப்படுத்த 35 நாடுகள் வியூகம் அமைக்க திட்டம்

லிபிய ஜனாதிபதி கடாபியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வியூகம் அமைப்பது குறித்து 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி ஆராயும் சர்வதேச மாநாடு நாளை லண்டனில் இடம்பெறவுள்ளது.இந்தநிலையில், கூட்டு ராணுவப்படைகள் மூலமே கடாபியை முறியடிக்க முடியும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கருத்து வெளியிட்டுள்ளது.

லிபியா ஜனாதிபதி கடாபியை பதவி விலக்கோரி அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஒருபிரிவாக செயல்பட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸிலும் எதிரொலித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில்  அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக்கழத்தில் இன்று லிபியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை வெளியிடவுள்ளார்.

இதனிடையே அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தலைமையில் லண்டனில் நாளை 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply