சம்பந்தன் தலைமையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த மாத முற்பகுதியில் நாடு திரும்பியவுடன் அவரது தலைமையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாட்சியமளிக்காததால், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது என அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் போதே சோனாதிராஜா இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தலைவர் இரா சம்பந்தன் நாடு திரும்பியதும் நாம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்போம். இது குறித்து நாம் ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளோம். ஆணைக்குழு இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு நாம் ஒருபோதும் இடையூறாக இருக்கமாட்டோம். ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply