எந்தவொரு அப்பாவிப் பிரஜையும் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது : ஜனாதிபதி
நான் மக்களின் உரிமைகளை எப்போதும் நேசிக்கின்றேன். ஆனால் எந்தவொரு அப்பாவி பிரஜையுமே பாதிக்கப்படக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அலரிமாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கூட்டுப் படைகள் லிபியா மீது மேற்கொள்ளும் தாக்குதல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.
இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் கூறுகையில் எந்தவொரு நாட்டிலும் எவராலும் சிவிலியன்கள் கொல்லப்படுவதையும், இறைமை மீறப்படுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இச்சமயம் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில், கூட்டுப்படையினரின் சில செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1973ம் ஆண்டு தீர்மானத்தை மீறும் வகையில் அமைந்துள்ளன என்றார்.
இவ்வேளையில் மற்றொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக ஐ. நா. பிரதிநிதிகள் உட்பட எவரும் தோன்றி சாட்சியமளிக்க முடியும் என்றும் கூறினார்.
அதேநேரம் ஐரோப்பிய யூனியன் ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீக்கியதால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக எமது ஆடை உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply