சர்வதேச நாணய நிதியத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் ஸ்ட்ரோஸ்-கான்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டோமினிக் ஸ்ட்ரோஸ்-கான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாலியல் புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அவர் மீது புகார்கள் எழுந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில் இன்று நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஸ்ட்ரோஸ்-கான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள ஜோன் எப். கெனடி விமானநிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply