இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்; சர்வதேச மன்னிப்புச் சபை கோருகிறது

ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை மூலம் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை மீது சர்வதேச ரீதியில் விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சுயாதீன பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சபையின் பெற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கைக்கு எதிரானகுற்றச்சாட்டுகளை ஐ. நா. மனித உரிமைகள் சபை உதாசீனம் செய்துள்ளது எனவும், அக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
 
இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
 சுயாதீன விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளது. இதனால் சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் சபை முயற்சிக்க வேண்டும். அனைத்து இலங்கையினரதும் உரிமைகளைப் பாதுகாத்து கடந்தகால துரதிர்ஷ்டங்களை மீண்டும் சந்திக்காமல் இருக்க சரியான சூழல் உருவாவதற்கு மனித உரிமைகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 2009ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி ஐ.நாவின் மனித உரிமைகள் சபை பிரேரணை ஒன்றை நிறைவேற்றியது. அதில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சமாதானம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்தது. இருந்தும் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து அந்தப் பிரேரணையில் எந்தவிதமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.தற்போது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் சபை ஆதரவு வழங்கவேண்டும்.இப்படி சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply