நெதர்லாந்தில் புலிகளுக்கு நிதி சேகரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நன்கொடைகளை வழங்கும்படி நெதர்லாந்து தமிழர்களிடம் கோரப்படுவதாக அந்நாட்டு நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்தின் நீதிமன்ற தகவல்களை வெளியிடும் செய்தித்தாள் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருவதுடன் விடுதலைப் புலிகளின் நெதர்லாந்து கிளையின் தலைவர் மற்றும் பல விடுதலைப் புலி அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தில் வாழும் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் திட்டமிட்ட வகையில் பலவந்தமாக நிதி வசூலிக்கின்றனர்.

பணம் கொடுக்க மறுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதிச் சேகரிப்பு தொடர்வதாக நெதர்லாந்தின் நீதிமன்ற தரப்பு தெரிவித்துள்ளது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் காரணமாக 1980 காலப் பகுதியிலேயே அதிகமானவர்கள் நெதர்லாந்திற்கு சென்றுள்ளனர்.

நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் 2006 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply