சரத் பொன்சேகாவை அரசு மறந்துவிட்டது : ஜ.தே.மு

இலங்கையின் யுத்த வெற்றியின் இரண்டாவது வருட பூர்த்தி நிகழ்வுகளின் போது அரசு, முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகாவை மறந்துவிட்டதாக ஜனநாயக தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. சரத்பொன்சேகாவை நேற்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சென்று சந்தித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளதோடு, யுத்த வெற்றியில் பெரிதும் பங்கு கொண்ட ஒரு முக்கிய நபரை மறத்துள்ளமையானது கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
சரத் பொன்சாகவை விடுதலை செய்யக்கோரி மக்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
 
மேலும் ஜனநாயத்துக்கு விரோதமாக சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மருத்துவத்துக்குகூட நீதிமன்றத்தில் அனுமதிகோர வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply