விடுதலைப்புலி உறுப்பினர்கள் 900 பேரை விடுவிக்க ஏற்பாடு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 900 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்தார். புனர்வாழ்வு முகாம்களில் 4 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தற்போது எஞ்சியுள்ளதாகவும், அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வருட இறுதிக்குள் புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply