நெடியவனின் கைது மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் : குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனை குறிப்பதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்று முனைகளில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணக்கத்திற்குரிய பிதா இமானுவல் தலைமையிலான க்ளோபல் தமிழ் ண்;பாராம் அமைப்பு, ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ இராச்சியம் மற்றும் நெடியவன் தலைமையிலான அமைப்பு ஆகியன செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதில் நெடியவனின் அமைப்பே மிகவும் வன்முறையான அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன எனக் கருத முடியாது என தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற வலயங்களை நேரில் பார்வையிடுமாறு ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடனேயே இலங்கை யுத்தத்தை வெற்றி கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் பிரதான தமிழ் தலைமைத்துவங்களை உருவாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply