மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்!
இலங்கையில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழீழ விடுதலைப புலிகள் மீண்டும் மீள் இணையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டு சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பரந்து வாழும் நிலையில் தமிழ்நாடு, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் யுத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சஞ்சிகையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சில நாட்டு புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் புலிகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply