இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரம்
இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரமளித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வாசிங்டனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை பொறுப்பு கூறாத பட்சத்தில் அபிவிருத்திக்காக வழங்கும் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிடும்.
அவசரகால நடமுறைகளை மீளப்பெறுதல், ஊடக சுதந்திரத்துக்கு உறுதியளித்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பு கூறாதிருப்பதால் இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமெரிக்க வெளிவிவகார செயற்குழு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் எடுத்திருந்தது.
ஒபாமாவின் நிர்வாக்குழுவின் உயரதிகாரியான அமெரிக்க காங்கிரஸ் கொவார்ட் பேர்மன் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்திருந்தார். காங்கிரஸ் அரங்கத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்தே இவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply