நீதியான தேர்தல் நடந்தால் பொன்சேகா வெல்வார் என்று கூறினார் : சந்திரிகா
நீதியானதும், நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்று நடத்தப்பட்டால் சரத் பொன்சேகா வெற்றிபெறுவாரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டினிஸிடம் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் நடத் திய சந்திப்பொன்று குறித்து அமெரிக்கத் தூதுவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடக்கும் ஆட்சியில் பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் முன்னொருபோதுமில்லாத வகையில் பலவீனமடைந்திருக்கின்றன என அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சந்திரிகா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீங்கு விளைவிக்கக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் பற்றி தாம் ஆச்சரியப்பட்டார் எனவும், நீதியானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தினால், பொன்சேகா நிச்சயம் வெல்வாரென்றும் குறிப்பிட்டுள்ள சந்திரிகா, பொன்சேகா தீவிர பௌத்த பின்னணியைக் கொண்டிருப்பதால் அவர் ராஜபக்ஷவை விட நேர்மையானவர், கொடுக்கும் வாக்குறுதிகளை மீறவும் மாட்டாரென சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மனோநிலையும், சிந்தனையும் வெகுவாக மாறிவருகின்றன என்பதை விரிவாக எடுத்துக்கூறிய குமாரதுங்க, அரசியலில் இருந்து முற்றாக தாம் விலகிக்கொண்டபோதிலும் அரசியலில் தனது மீள்பிரவேசம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் தனது நடமாட்டங்களை ராஜபக்ஷ மட்டுப்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply