மூன்று பேரின் தூக்குத் தண்டனை விவகாரம்: சோனியாவுக்கு ராமதாஸ் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதிபா பாட்டீலுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளிப்படையாகக் கடிதம் எழுத வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உரத்தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு நீடித்து வருகிறது. மின்வெட்டைப் போக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மின்தடைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply