தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் 21ஆம் திகதி முழுநாள் விவாதம் : அடைக்கலநாதன்
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதத்தினை நடத்தவுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள உண்ணாவிரதம் தொடர்பில் கடந்த புதன்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்கின்றனர். அவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முழு நேர விவாதத்திற்கான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்வைக்கவுள்ளார்.
அதன்போது தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படும் என்பதுடன் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் இடம்பெற்று வரும் காணிப்பதிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தினையும் நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply