அரசாங்கத்தின் பலம் செயற்கைத் தனமானது : சோமவன்ச

அரசாங்கத்தின் பலம் செயற்கைத் தனமானது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்ட போதிலும் அது மக்களின் மெய்யான அபிலாஸைகளை பிரதிபலிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பலம் சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். லஞ்சம் மற்றும் பதவிகளைப் பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு தாவியுள்ளனர். இதனை மெய்யான ஜனநாயகமாகக் கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களில் பூதாகாரமாக வெளிப்படுத்தப்படும் அளவிற்கு கட்சியில் முரண்பாடுகளோ பிளவுகளோ கிடையாது எனவும் இன்னமும் மூன்று மாதங்களுக்கு சகல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி நியமனங்கள் குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இறுதித் தீர்மானங்களை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய முதலாளித்துவ கொள்கைகளுக்கு பதிலாக சோசலிச கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கிக் கலாச்சாரத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply