அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க அதிகாரிகள் ஜெனீவா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்?

அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க அதிகாரிகள் ஜெனீவா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் 100க்கும் மேற்பட்ட ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஈடுபட்டு வருவதாக ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
இந்த அழுத்தங்களை முறியடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply