கைக்குண்டு வெடிப்பு: ஐந்து சிறுவர்கள் காயம்
கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.குறித்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் கைக்குண்டு ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கைக்குண்டு விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டவை என சந்தேகிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply