தமிழர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய இலங்கை கடற்படை: முல்லைத்தீவில் சம்பவம

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி, வில்லுவெளிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆறு பேரை அந்தப் பகுதி கடற்படையினர் மரத்தில் கட்டி வைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த கோபால் மதீஸ்வரன் (வயது 18), சுப்பிரமணியம் அமிர்தலிங்கம் (வயது 55) ஆகியோரே கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
கருநாட்டுக்கேணி வில்லுவெளிப் பகுதியில் தங்கிநின்று மாடு மேய்த்துவரும் இவர்கள் மாலை மாடுகளை பட்டியில் அடைப்பதற்காக கொண்டு சென்றவேளை இவர்களை இடைமறித்த கடற்படையினர் மரங்களில் கட்டி வைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்தோடு அவர்கள் தங்கியிருந்த குடிசைகளில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

நாம் கடற்படை முகாமுக்கு அண்மையாக மாடுகளைக் கலைத்து சென்றவேளை வழிமறிக்கப்பட்டுக் கடற்ப டையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டோம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்ப்பில் கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த அரச அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த ஆறு பேரும் அறுகுவெளிப் பகுதியில் தங்கியிருந்து மாடு வளர்த்து வருகின்றனர் என்றும் அவை அவர்களது சொந்த மாடுகள் என்றும் உறுதிப்படுத்தினார்.சம்பவம் தொடர்பில் கருநாட்டுக் கேணி இராணுவ முகாமில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply