சர்வதேச தலையீடே குணரத்ணத்தின் விடுதலைக்கு காரணம் : சம்பா சோமரத்ன

கொழும்பில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள தனது கணவரான பிரேம்குமார் குணரத்ணம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடி, அவுஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறினார் என அவரது மனைவியான சம்பா சோமரத்ன தெரிவித்துள்ளார். 42 வயதுடைய பிரேம்குமார் குணரத்ணம் இராணுவத்தினரால் கடந்த 6ம் திகதி கடத்திச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், பிரேம்குமார் பொலிஸ் நிலையில் சரணடைந்த பின் நாடு கடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் தொடர்பு கொண்டு “நான் ஆகாயத்தில் இருக்கிறேன், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று கூறியதாக சம்பா சோமரத்ன குறிப்பிட்டார்.

சர்வதேசத்தின் தலையீடே பிரேம்குமாரின் விடுதலைக்குக் காரணம் என சம்பா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குமார் குணரத்ணம் தமிழராக இருந்த போதிலும் புலிகள் இயக்கத்துடன் எவ்வித தொடர்பையும் பேணவில்லை எனவும் இலங்கையில் இடம்பெறும் மோசடிகளுக்கு எதிராக செயற்படவே கட்சி ஆரம்பிக்க முன்வந்ததாகவும் சம்பா சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply