பாகிஸ்தான் நேரடி முதலீட்டை அனுமதிக்க இந்தியா முடிவு
பாகிஸ்தானிலிருந்து நேரடி முதலீட்டை அனுமதிக்க, இந்தியா கொள்கையளவில் முடிவு செய்திருக்கிறது.இதன் மூலம் பாகிஸ்தானிய நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தக முயற்சிகளைத் தொடங்க முடியும்.
இந்த இரு நாடுகளும் நாளொன்றுக்கு 600 லாரிகள் போய்வர உதவி செய்யும் வகையில், எல்லைப்புற கடவுச் சாவடியை இன்று விஸ்தரித்துள்ளன.
இந்த விஸ்தரிப்பு , தற்போதைய இரு நாட்டு நேரடி வர்த்தகத்தை மும்மடங்காக்கி, வருடத்துக்கு 8 பிலியன் டாலர்கள் என்ற அளவுக்குக் கொண்டு செல்லும் என்று மதிப்பிடப்படுகிறது.
தற்போது டில்லியில் நடந்து வரும் வர்த்தக கண்காட்சியில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான நிறுவனங்கள் கலந்துகொள்ளும் நிலையில், இந்த நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவும் வந்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply