மாகாண சபை கலைப்பு தொடர்பில் அறிவிக்கப்படவில்லை : முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாணசபை முன்கூட்யே கலைப்பது தொடர்பில் இதுவரையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே மாகாணசபை கலைத்து தேர்தல்களை நடத்துவது தொடர்பில் எவரும் தமக்கு அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக் காலம் முடிவடைவடைதற்கு முன்னதாகவே மாகாணசபையை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உத்தியோகபூர்வமாக மாகாணசபை கலைப்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு, சபரகமுவா மற்றும் வட மத்திய மாகாணசபைகளை கலைத்துத் தேர்தல் நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply