அகதி முகாம் வாழ்க்கைக்கு முடிவு தாருங்கள் – கிளிவெட்டி இடைத்தங்கல் முகாம் மக்கள்கோரிக்கை

திருகோணமலை சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து, கிளிவெட்டி இடைத்தங்கல் நலன்புரி முகாமில் வசிக்கும் தமிழ் மக்கள் தமது அகதி முகாம் வாழ்க்கயை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து, 2 வருடங்கள் மட்டக்களப்பிலும் அதன்பின் கிளிவெட்டியிலும் 6 வருடங்களாக அகதிகளாக வாழும் இந்த மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர்.

தாங்கள் வசிக்கும் தகரத்தினாலான கொட்டில்களில் அதிக வெப்பமாக இருப்பதனால்இ காலை 8 மணிதொடக்கம் மாலை 4 மணிவரை குறிப்பிட்ட கொட்டகைக்குள் நுழைய முடியாதுள்ளதாகவும் அத்துடன் மலசலகூட வசதிகள்இ தண்ணீர் வசதிகள், சுகாதார வசதிகள் என்பன போதியளவு வழங்கப்பட வில்லையெனவும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் முகாமிற்கு வருகை தருவதில்லை எனவும் அம்மக்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.

அத்துடன் உலக உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும்இ தொண்டர் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்தாலும் படையினர் அதற்கு அனுமதி வழங்காததால் அந்த உதவிகளும் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவோ வசதியாக வாழ்ந்த தாங்கள் இவ்வாறு அகதி வாழ்க்கை வாழ்வதாகவும் எப்படியாவது தங்களது சொந்த இடங்களில் மீளவும் குடியேற உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்ய இந்திய பாராளுமன்றக் குழுவினர் கூட, தங்களின் முகாமிற்கு விஜயம் செய்து, தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை பார்வையிடாமல் சென்றமை தங்களுக்கு மிகுந்த வேதனையாக இருப்பதாகவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அம்மக்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply