இலங்கை விவகாரம்: அமெரிக்க, இந்தியாவின் கூட்டணி சீனா மீதான பழிவாங்கல்!

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து சீனாவை பழிவாங்கும்  வகையில்  இலங்கை  விடயத்தில்  தலையிடுகின்றன  என்று  குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், பாரிஸை  தலைமையகமாகக்  கொண்ட  ஜனநாயக  மற்றும்  ஒத்துழைப்புக்கான  கற்கை  நிலையத்தின்  பணிப்பாளர்  ஜோன் லால்லேன்ட்  இந்த  கருத்தை  வெளியிட்டுள்ளார்.

இந்த  இரண்டு நாடுகளும்  இலங்கையின்  உள்நாட்டு  விடயங்களில்  தலையிடுவதாக  கருத்தரங்கு  ஒன்றின்  போது  அவர்  குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில்  இலங்கைக்கு  எதிராக  மேற்கொள்ளப்பட்ட  தீர்மானம், தமிழீழ  விடுதலைப் புலிகளின்  ஆதரவாளர்கள் குறிப்பாக  புலம்பெயர்ந்த  தமிழர்களுக்கு  மேலும்  உற்சாகத்தை  கொடுக்கும்  என்றும்  அவர்  சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை  போன்ற  நாடுகளில்  சர்வதேச  அரச  சார்பற்ற  நிறுவனங்களின்  பிரசன்னத்தை  குறைக்க வேண்டும்.  இது  நாட்டுக்கு  நன்மையை  பயக்கும்.  குறிப்பாக  சர்வதேச  மன்னிப்பு  சபை  கனேடிய  தமிழர்களிடம்  இருந்து  நிதியை  பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து, அது  ஜெனீவாவில்  இலங்கை  அரசாங்கத்துக்கு  எதிராக  கருத்துக்களை  முன்வைக்கிறது.  இதன்போது  எவ்வாறு  அரச சார்பற்ற  நிறுவனங்களின்  மீது நம்பிக்கை  கொள்ளமுடியும்  என்று  ஜோன் லால்லேன்ட்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply