சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை எரித்தவர்கள் கைது

இலங்கையில் இந்து கோவிலை இடிக்க முயற்சிப்பதாக கூறி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை திருகோணமலையில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க முயற்சிப்பதாக கூறி, இலங்கை அரசை கண்டித்து சென்னை மிழூசிக் அகாடமி அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில பொருளாளர் காஞ்சி கண்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை பிடித்துக் கொண்டு இலங்கை அரசை கண்டித்து கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆட்டோவுக்குள் வைத்து ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதே இந்த தீ விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி மாநில பொருளாளர் காஞ்சிகண்ணனிடம் கேட்டபோது, ‘ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் இலங்கை ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்தார். இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த இந்து முன்னணியினரை பொலிசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply