திசை தெரியாது தத்தளித்த சோமாளியர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்

சில நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலிய பிரஜைகள் நால்வரை இலங்கை மீனவர்கள் காப்பாற்றி அழைத்து வந்துள்ளனர்.

மோதரை கடற்பரப்பில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் சென்ற ரோலர் படகு இன்று  காலை 8.30 அளவில் மோதரை கடற்பரப்பை வந்தடைந்தது.

இப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களைவிட மேலதிகமாக நால்வர் கரை திரும்பியுள்ளனர்.

இது தொடர்பில் படகின் கெப்டனிடம் வினவியபோது நால்வரும் சோமாலிய நாட்டு பிரஜைகள் என்பது தெரியவந்ததா‍க பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2012-05-02 அன்று சிறிய படகு ஒன்றில் இவர்கள் வந்ததாகவும் கடலில் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்த வேளை, காப்பாற்றப்பட்டதாகவும் இலங்கை மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நான்கு சோமாலிய பிரஜைகளும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மோதரை பொலிஸாரால் கொழும்பு துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply