முச்சக்கர வண்டியில் மூவருக்கு மேல் பயணிக்க முடியாது

முச்சக்கர வண்டி, பயணிகள் ஆசனத்தில் இன்று முதல் மூன்று பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் இது கட்டாயப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்களில் மூன்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதால் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் பயணிகள் ஆசனத்தில் மூன்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply