கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுப்பது பெறுமதியானது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுப்பது பெறுமதியானது என அமெரிக்க தூதரகத்தின் அரசியல்துறை பிரதானி போல் கார்டர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவது அவசியமாகும்.
இதற்கு சில நிபந்தனைகளுடன் கூட்டமைப்பு இதில் இடம்பெற நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றுக்காக அமெரிக்க ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தொடர்ந்து அரசியல் தீர்வு மற்றும் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply