முன்னாள் போராளிகள் 75 பேர் ஜூலை மாதம் விடுதலை

ஒரு வருட கால புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 75 பேர் எதிர்வரும் ஜூலை மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து இவர்கள் சமூகமயப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ராஜகுரு தெரிவித்துள்ளார்.

680 முன்னாள் போராளிகள் தற்போது புனர்வாழ்வு பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை செய்யப்படவுள்ள முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிலர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய சுய தொழில் வாய்ப்பிற்காக 25,0000 ரூபா கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ராஜகுரு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply