தலை துண்டிக்கப்பட்டு 49 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்
மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி என்ற நகரத்தில் தலை துண்டித்து 49 பேர் கொலை செய்யப்பட்டுள்ள பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நகரம் அமெரிக்காவின் எல்லையில் உள்ளது. இந்த நகரின் நெடுஞ்சாலையில் கருப்பு பிளாஸ்டிக் பைகளுக்குள் சடலங்கள் கட்டப்பட்டிருந்துள்ளன.
பைகளை இனங்கண்ட பொலிஸார்விசாரணைகளை மேற்கொண்டதில் 49 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இதனால் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது சகஜம்.
அது போன்ற தகராறில் இந்த படுகொலைகள் நடந்து இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply