தமிழீழத்தில் ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வியே!

தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வியே’ என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்தெரிவித்துள்ளார்.

‘முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது‘. இலங்கை – இந்தியப் பகைவர்களால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற நிகழ்வுகளில் எதிரொலித்த முழக்கங்கள் இவை.

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தஞ்சையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைவர் தோழர் பெ.மணிய ரசன் ‘முள்ளிவாய்க்கால் குருதி வெள்ளத்தில் மூழ்கிய தமிழ் இனச் சொந்தங்ளுக்கும், விடுதலைப்புலி வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேர்ந்த பின்னடைவும், தோல்வியும் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் ஏற்பட்ட தோல்வியாகும். இக்கருத்தை இன உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நான் சொல்லவில்லை.

‘ஆயுதமேந்தி முப்படைகள் கொண்டு போராடிய ஈழத்தமிழர்களையே தோற்கடித்துவிட்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மாத்திரம்?’ என்ற உணர்வு இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும்இ நமக்குப் பகைவர்களாகிப் போன அண்டை இனங்களான கன்னடர்கள், மலையாளிகள் போன்றோருக்கும் ஏற்படும்.

முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

இதை உணர்ந்து, சாதியாக பிளவு படாமல் ஒன்றுதிரண்டு வருங்காலத்தில் மூர்க்கமாக உரிமை மீட்கப் போராட வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என்று நாம் உணர வேண்டும்.

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளையில், இந்தப் படிப்பினையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply