மீண்டும் சிறைக்கு திரும்பினார் பொன்சேகா

நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சரத் பொன்சேகா இன்று காலை வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் உடல் நிலையை இன்று பரிசோதித்த வைத்தியர் அவரை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட சரத் பொன்சேகா மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சரத் பொன்சேககாவை விடுதலை செய்யும் ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பியுள்ள நிலையில் அது இன்னும் தனக்கு கிடைக்கப்பெறவில்லை என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

ஆவணங்கள் கிடைத்ததும் சட்ட அடிப்படையில் சரத் பொன்சேகாவை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். பெரும்பாலும் சரத் பொன்சேகா இன்று விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply