ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்
கட்டாருக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்.
டோஹா மாநாட்டிற்கான சிறப்பு அதிதியாக கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி கட்டாருக்குச் சென்றிருந்தார்.
இம்முறை இடம்பெற்ற டோஹா பொருளாதார அபிவிருத்தி மாநாட்டின் 12 கூட்டத் தொடரில் ஜனாதிபதி விசேட உரையாற்றினார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர், பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணம் தொடர்பில் ஜனாதிபதி அங்கு உரையாற்றினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply