பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள்
18வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பொலிஸ் ஆணைக்குழுவுக்கு, கடந்த 3 மாதங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான 224 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆணைக்குழுவின் தலைவர் சேனக வல்கம்பாய இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிக அளவில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பொது மக்கள் இந்த ஆணைக்குழுவில் முறைபாடுகளை தெரிவிப்பதற்கு, கொழும்பு தலைமை காரியாலயம் தவிர, மேலும் ஏழு மாவட்டங்களில் அதன் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.
எதிவரும் காலங்களில் இந்த காரியாலயங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply